தென்காசி அருகே அதிமுகவை நிராகரிப்போம் பொதுக்கூட்டம்

Update: 2020-12-28 05:33 GMT

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள தேன்பொத்தை ஊராட்சியில் திமுக சார்பில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு திமுக மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர் அய்யாத்துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார். தென்காசி ஒன்றிய செயலாளர் இராமையா (எ) துரை முன்னிலை வகித்தார். அதிமுகவை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்ற விளக்கத்துடன் அய்யாதுரை பாண்டியன் பேசினார். இந்நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் லிங்கராஜ், காசிதர்மம் துரை, செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஹக்கீம்,மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் தமிழ்ச்செல்வி, திருமலாபுரம் கிளை செயலாளர் முருகன், தகவல் தொழில் நுட்ப அணி தளபதி சுரேஷ்,தேன்பொத்தை முருகன்,ஐயப்பன் ஆசாரிஇலஞ்சி பலவேசம், விஸ்வநாதபுரம் பேச்சிமுத்து, காளிராஜ், தலைவன்கோட்டை சாமிதுரை மற்றும் கழக நிர்வாகிகள் திராளக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News