பட்டாசு விற்பனை செய்ய நிரந்தர உரிமம் வழங்க வேண்டும் :மாநில தலைவர் ராஜசேகரன்

Update: 2020-12-26 11:26 GMT

பட்டாசு விற்பனை செய்ய நிரந்தர உரிமம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு விற்பனையாளர் சங்க மாநில தலைவர் ராஜசேகரன் கூறினார்.

தென்காசியை அடுத்த குற்றாலத்தில் தமிழ்நாடு பட்டாசு விற்பனையாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத்தொடர்ந்து மாநிலத் தலைவர் ராஜசேகரன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது :-கொரோனா வைரஸ் பாதிப்பால் அனைத்து தொழில்களும் பாதிப்படைந்துள்ளது. பட்டாசு தொழிலும் பாதிப்படைந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் பட்டாசு வியாபாரம் 20% குறைந்துள்ளது. எல்லா மாவட்டங்களிலும் 5 வருட நிரந்தர உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் பட்டாசு விற்பனை உரிமத்தை புதுப்பித்தலில் உள்ள சிக்கலை எளிமையாக வேண்டும்.

தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு விற்பனை உரிமத்தை முப்பது நாட்களுக்கு முன்பாக வழங்க வேண்டும். அதேபோல் மாநகராட்சி பகுதியில் உள்ள பட்டாசு விற்பனைக்கு நிரந்தர உரிமம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில் தென்காசி திருநெல்வேலி தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News