மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சியமைக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜூ

Update: 2020-12-25 11:30 GMT

வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் கடந்த 4ம் தேதியன்று நடைபெற்ற அதிமுக எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் கார்த்திகேயனின் இல்லத் திருமண விழாவை தொடர்ந்து மணமக்களை நேரில் சென்று தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தினர். இதனைத்தொடர்ந்து அங்குள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியின்போது அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது: வரும் தேர்தலில் அதிமுகவை பொதுமக்கள் 100 சதவீத வெற்றியுடன்,ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பொது மக்கள் தயாராகி விட்டதாக கூறினார். பல சாதனை திட்டங்களை தமிழக முதலமைச்சர் நிறைவேற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார் நிகழ்ச்சியில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அதிமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சேகர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News