வேலை இல்லாதவரா நீங்க..? தமிழக அரசின் உதவித்தொகைக்கு விண்ணப்பிங்க..!

படித்துவிட்டு வேலை இல்லாதவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் வந்திடுச்சிங்க.

Update: 2024-10-21 13:51 GMT

வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு தமிழக அரசின் உதவித்தொகை -கோப்பு படம் 

வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பம் செய்வது எப்படி என்பது  குறித்த முழு விவரம் தரப்பட்டுள்ளது.

தமிழகம் கல்வியில் வளர்ச்சி பெற்றிருந்தாலும் வேலை இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக பொறியியல் பட்டம் பெற்ற பல இளைஞர்கள் தகுதியான வேலை கிடைக்காமல் இருக்கின்றனர்.

அவ்வாறு படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களின் நலனிற்காக தமிழக அரசு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 2006ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக புதுபித்தவர்களுக்கு இந்த உதவித் தொகை கிடைத்து வருகிறது. பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அதற்கு மேல் கல்வி கற்றவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள் ஆவார்கள்.

செப்டம்பர் 30,2024 அன்றில் இருந்து ஐந்தாண்டுகள் நிறைவுற்று வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு நிறைவடைந்து வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு உதவித் தொகை வழங்கிவருகிறது.

தகுதி:

1)விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72.000க்கு கீழ் இருக்க வேண்டும்.

2)பழங்குடியின விண்ணப்பதாரர் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.இதர வகுப்பை சேர்ந்த விண்ணப்பதாரர் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

உதவித் தொகை விவரம்:

பத்தாம் வகுப்பில் தோல்வி - மாதம் ரூ.200

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி - மாதம் ரூ.300

பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி - மாதம் ரூ.400

பட்டப்படிப்பு தேர்ச்சி - மாதம் ரூ.600

மாற்றுத் திறனானிகளுக்கான ஊக்கத் தொகை விவரம்:

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி - மாதம் ரூ.600

பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி - மாதம் ரூ.750

பட்டப்படிப்பு தேர்ச்சி - மாதம் ரூ.1000

மேலும் கூடுதல் விவரங்கள் பெற https://tnvelaivaaippu.gov.in இணையதள பக்கத்டயத்துக்குச் சென்று பாருங்கள். இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க வருகின்ற 31 ஆம் தேதி கடைசிநாள் ஆகும். 

Tags:    

Similar News