டாக்டர்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை
டாக்டர்களின் பாதுகாப்பிற்காக தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.;
மேற்கு வங்க மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்டத்தை அடுத்து மருத்துவமனையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய திட்டத்தை அமல்படுத்தியது தமிழ்நாடு மருத்துவத்துறை. ஏற்கனவே டாக்டர்கள் தங்களின் பாதுகாப்பு குறித்து அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். தவிர பலமுறை போராட்டங்களிலும் ஈடுபட்டனர். டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை கவனித்த தமிழக அரசு டாக்டர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை உணர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்காக இத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவுத்தல்கள் பற்றி கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் கட்டாயம் காவல்துறை மையம் அமைக்க வேண்டும். மருத்துவமனை வளாகம் முழுவதும் சிசிடிவி பொருத்த வேண்டும். மருத்துவமனைகளில் பணியாளர்களின் பாதுகாப்புக்காக ஆலோசனை மற்றும் பாதுகாப்பு என 2 கமிட்டி அமைக்க வேண்டும்.
மருத்துவமனையில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும். பார்வையாளர்களுக்கு அடையாள அட்டை கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரவு நேரத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய மருத்துவமனையை சுற்றி மின்விளக்குகள் அமைக்க வேண்டும். மருத்துவ பணியாளர்களை தாக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பதாகை வைக்க வேண்டும் என தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு எடுத்துள்ள இந்த ந டவடிக்கைகள் ஒரு குறிப்பிட்ட அளவு பாதுகாப்பினை வழங்கும். இன்னும் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.