மத்திய பட்ஜெட்; தமிழக முதல்வர் ஸ்டாலின் கோபம்

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.;

Update: 2024-07-24 02:09 GMT

தமிழக முதல்வர் ஸ்டாலின் ( கோப்பு படம்)

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

தமிழகத்திற்கு எந்த ஒரு சிறப்பு திட்டங்களும் மத்திய பட்ஜெட்டில் இல்லை. தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை நிதிநிலை அறிக்கை தந்துள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை. தமிழக அரசு பரிந்துரைத்த எந்த திட்டங்களையும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. பா.ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் குறித்து எந்த சிந்தனையும் பா.ஜனதா அரசுக்கு இல்லை என்பதையே பட்ஜெட் காட்டுகிறது. 2 மிகப்பெரிய பேரிடரை சந்தித்த தமிழகத்திற்கு இதுவரை போதிய வெள்ள நிவாரணம் தரப்படவில்லை.

தமிழகத்திற்கு திட்டத்தை அறிவிக்காததால் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன். தமிழகத்திற்கு புதிய திட்டங்களை அறிவிக்காததால் நாடாளுமன்ற வளாகத்தில் நாளை தி.மு.க. எம்.பி.,க்கள் மற்றும் கூட்டணி எம்.பி.,க்கள் போராட்டம் நடத்த உள்ளார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மத்திய பட்ஜெட் காங்., தேர்தல் அறிக்கையின் காப்பி என ராகுல் விமர்சித்துள்ள நிலையில், பட்ஜெட்டை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் இண்டி கூட்டணி சார்பில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக காங்., தலைவர் கார்கே  அறிவித்துள்ளார்.

Similar News