தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு

தஞ்சை அருகே, பள்ளி மாணவி தற்கொலை செய்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.;

Update: 2022-01-31 07:45 GMT

தஞ்சை மாவட்டம், மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளி உள்ளது. இங்கு படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த 12ம் வகுப்பு, மாணவி லாவண்யா, கடந்த சில நாள்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி, பள்ளி வார்டன் மற்றும் நிர்வாகம், மதம் மாற கட்டாயப்படுத்தியால் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாணவி பேசும் வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, பாஜக போராட்டமும் நடத்தி வருகிறது.

மாணவி லாவண்யா தற்கொலைக்கு கட்டாய மதமாற்ற துன்புறுத்தல் காரணம் கிடையாது என, மாவட்ட கல்வி அலுவலர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது

இதனிடையே, மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கூறி மாணவியின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News