தமிழகத்தில் வேலைநிறுத்தத்தால் பஸ் சேவை பாதிப்பு: பொதுமக்கள் அவதி

மத்திய அரசுக்கு எதிரான தொழிற்சங்கங்களின் 2 நாள் வேலை நிறுத்தம் காரணமாக, தமிழகத்தில் பல இடங்களில் அரசு பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-03-28 02:15 GMT

கோப்பு படம் 

மத்தியில் உள்ள பாஜக அரசு தொழிலாளர் விரோத போக்கில் ஈடுபட்டுள்ளதாகக்கூறி, தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. ஐஎன்டியுசி , சிஐடியு, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

இதில் தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. இதனால், சென்னை உள்பட பல இடங்களில் அரசு பஸ்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதால், வெளியூர் செல்வோர் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

இதேபோல், சென்னை மாநகர பேருந்துகளும் குறைந்த எண்ணிக்கையில் இயங்குவதால், வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாரிமுனை, வடபழனி, அண்ணா நகர், தி. நகர் பணிமனைகளில் 80%க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், ஷேர் ஆட்டோ, ஆட்டோக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அவற்றில், அதிக எண்ணிக்கையில் பயணிக்கும் சூழலை பார்க்க முடிகிறது. பல ஆட்டோ ஓட்டுனர்கள் கட்டணங்களை இரட்டிப்பாக்கி விட்டதாகவும் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் திருவள்ளூர், விழுப்புரம், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களிலும் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News