மாநில ரேப்பிட்- விரைவு சதுரங்கப்போட்டி தொடக்கம்
ஒன்பது சுற்றுகளைக் கொண்ட இப்போட்டியில் விளையாடுபவர்களுக்கு தலா ஐந்து நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும்
தமிழ்நாடு மாநில ரேப்பிட்- விரைவு சதுரங்கப்போட்டி 26வது மாநிலப்போட்டி புதுக்கோட்டை செந்தூரான் பொறியியல் கல்லூரியில் நேற்று தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட்ட செஸ் சங்க தலைவர் தொழிலதிபர் ராமசந்திரன் தலைமையில், மாவட்ட செஸ் சங்க நிர்வாகிகள் இப்போட்டியினை சிறப்பாக நடத்தி வருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட வீரர்களும், வீராங்கனைகளும் காலத்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
போட்டியினை, சர்வதேச செஸ் நடுவர் ஆனந்த பாபு, நடுவர்கள் செல்வபிரகாஷ், அங்கப்பன், மணிகண்டன், பார்த்திபன், வினிதா செல்வம் ஆகியோர் நடத்தி னர்.
இந்த போட்டியின் தொடக்க விழாவில் செந்தூரான் பொறியியல் கல்லூரியின் நிர்வாகி முனைவர் கார்த்திக், விருதுநகர் மாவட்ட செஸ் சங்க செயலர் சுந்தர்ராஜன், புதுக்கோட்டை மாவட்ட செஸ் சங்க நிர்வாகிகள் முனைவர் கணேசன், அடைக்கலவன், அங்கப்பன், ஜெயக்குமார், செல்வம், இக்பால், பார்த்திபன், 90 வயது செஸ் வீரர் சுப்ரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இப்போட்டி ஒன்பது சுற்றுகளைக் கொண்டது. ஞாயிறு மதியம் தமிழ் நாடு மாநில அதிவிரைவு பிளிட்ஸ் செஸ் போட்டியும் நடைபெற உள்ளது. ஒன்பது சுற்றுகளைக் கொண்டஇப்போட்டியில் விளையாடுபவர்களுக்கு தலா ஐந்து நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும். இரண்டு போட்டிகளுக்கான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.