10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஒத்திவைப்பு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Update: 2022-06-16 07:59 GMT

தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் கடந்த மாதம் நடத்தப்பட்டு நிறைவடைந்து விட்ட நிலையில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 1 ஆம் தேதி முதல் தொடங்கியது. இதை தொடர்ந்து 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து இறுதி முடிவுகள் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை திட்டமிட்டபடி வெளியிடப்படும் என்றும் விடைத்தாள் திருத்திய மதிப்பெண்கள், பாடவாரியாக இணையதளத்தில் பதிவேற்றம் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக தேர்வுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு முடிவு வெளியீடு 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அன்றைய தினமே 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளிவரும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதி நண்பகல் 12 மணிக்கு வெளியாகும்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை

http://dge2.tn.nic.in,

http://dge.tn.gov.in ஆகிய இணையதள பக்கங்களில் அறிந்துக் கொள்ளலாம் 

Tags:    

Similar News