ரேஷன் கார்டு டவுன்லோட் பண்ணனுமா..? எப்டீன்னு தெரிஞ்சுக்கங்க..!
Smart Card Download-தற்காலத்தில் எல்லாமே ஆன்லைன் மயமாகிவிட்டது. அதனால்,ஆன்லைன் மூலமாக அரசுத் திட்டங்கள் எல்லாமே டிஜிடல் தளத்தில் செய்துகொள்ளும் வகை செய்துள்ளது தமிழக அரசு.;
smart card download-தமிழக அரசின் பொதுவிநியோகத்திட்ட வெப் சைட்.(கோப்பு படம்)
Smart Card Download-தற்காலத்தில் எல்லாமே ஆன்லைன் மயமாகிவிட்டது. அதனால்,ஆன்லைன் மூலமாக அரசுத் திட்டங்கள் எல்லாமே டிஜிடல் தளத்தில் செய்துகொள்ளும் வகை செய்துள்ளது தமிழக அரசு.TNPDS Smart Card என்பது Ration Card -ஐ மின்னணு முறையில் பெறும் அட்டையாகும். இந்த மின்னணு அட்டையின் மூலம் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கலாம். இதற்கான பிரத்யேகமான இணையதளமும் மொபைல் செயலியும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கு இன்று TNPDS Smart Card -ஐ எவ்வாறு Online மூலம் Download செய்வது என்பதை பாப்போம் வாங்க.
TNPDS Smart Card
முன்பெல்லாம் ரேஷன் கார்டு காகித தாள் வடிவில் அட்டையாக வழங்கப்பட்டன. ஆனால், தற்போது அனைவருக்கும் மின்னணு வடிவிலான ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. இது கொண்டு செல்வதற்கு எளிதாகவும், போலி அட்டைகளை ஒழிப்பதற்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருப்பதால், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாடு நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களை பெறுவதற்கு ரேஷன் அட்டை கட்டாயமாகும். இன்னும் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்காத்தவர்கள், உடனே Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
TNPDS Website and Mobile App
ரேஷன் கார்டு தொடர்புடைய சேவைகளை பெறுவதற்கு தமிழ்நாடு அரசு இணையதளம் மற்றும் மொபைல் ஆப்பை வழங்குகிறது.
TNPDS Website
தமிழ்நாடு அரசு tnpds.gov.in என்ற உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை வடிவமைத்துள்ளது. இந்த இணையதளம் மூலம் ரேஷன் அட்டை தொடர்புடைய பல்வேறு சேவைகளை ஆன்லைன் மூலம் பெற முடியும்.
smart card download
அந்த இணையதளம் மூலமாக கீழ்காணும் சேவைகளை பெறலாம்.
- Apply New Ration Card
- Ration Card Application Status
- Reprint Smart Card
- Reprint Smart Card Status
- Add Family Member
- Change of Address
- Family Head Member Change
- Remove Family Member
இந்த இணையதளத்தில் ரேஷன் கணக்கை Login செய்ய Username, Password போன்றவை எதுவும் தேவையில்லை. அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் நம்பர் இருந்தாலே போதுமானது.
நீங்கள் Login செய்யும்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும். அந்த OTP Number -ஐ உள்ளிட்டு 'கிளிக்' செய்தாலே ஓபன் ஆகிவிடும்.
TNePDS Mobile App
TNPDS Ration Card -க்கு மொபைல் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. Google Playstore இல் TNePDS Mobile App -ஐ Download செய்து அந்த செயலியை பயன்படுத்தலாம். இந்த செயலியில் Register செய்த Mobile Number-ஐ உள்ளிட்டு 'கிளிக்' செய்தால் OTP வரும். அந்த OTP Number-ஐ Enter செய்து 'கிளிக்' செய்தாலே Open ஆகிவிடும்.
TNPDS Mobile App இல் பின்வரும் சேவைகளை பெறலாம்
- Smart Ration Card Activation
- Transactions
- Entitlement
- Profile Details
- FPS Stocks
- Feedback
- Give it Up
அதாவது மேலே குறிப்பிட்டுள்ள விபரங்களின்படி, அட்டை செயலில் உள்ளதா, ரேஷன் கடைகளில் உள்ள உணவுப்பொருட்களின் இருப்பு, உங்களுக்கு வழங்க வேண்டிய பொருள்களின் அளவு, பரிவர்த்தனை தகவல்கள், அட்டை பற்றிய விவரங்கள் போன்றவற்றை மொபைல் செயலி மூலம் பார்க்க முடியும்.
smart card download
How to TNPDS Smart Card Download Online
TNPDS ரேஷன் அட்டையை Online மூலம் பதிவிறக்கம் செய்யலாம். அதன் வழிமுறைகள் தரப்பட்டுள்ளன.
Step 1: முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
Step 2: அங்கு வலது பக்க மூலையில் English மற்றும் Tamil என்ற இரண்டு மொழிகள் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்க.
Step 3: முதலாவதாக உள்ள Citizen Login என்பதை கிளிக் செய்யவும்.
Step 4: உங்களின் Smart Ration Card -ல் Register செய்த Mobile Number -ஐ Type செய்து, அதற்கு கீழே உள்ள Captcha Code -ஐ Enter செய்து Submit என்பதை அழுத்தவும்.
Step 5: இப்பொழுது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு 7 இலக்க OTP Number வரும். அந்த OTP எண்ணை உள்ளிட்டு Submit என்பதை கிளிக் செய்யவும்.
Step 6: தற்போது உங்களின் ஸ்மார்ட் கார்டு குறித்த அனைத்து தகவல்களும் தெரிவதை காண்பீர்கள். அதில் கீழே உள்ள Smart Card PDF Download என்பதை அழுத்தவும்.
Step 7: அதை அழுத்தியவுடன் ஒரு PDF File Download ஆகும். அதை Open செய்து பார்க்கும்போது மின்னணு அட்டை குறித்த அனைத்து விவரங்களும் அதில் இருக்கும்.இந்த TNPDS Smart Card PDF -ஐ Print எடுத்துக்கொள்ளலாம்.
எளிதாக அணுக சில வழிகாட்டல் :
TNPDS Full Form - Tamil Nadu Public Distribution System
Service Category - TNPDS Smart Card Download
Android App Link- TNPDS Mobile App
Official Website Link -https://tnpds.gov.in/
SMS Code Number - 9773904050
HelpLine – TollFree - 1967 (or) 1800-425-5901
Email Id - support@tnpds.com
Complaint Register Link - https://tnpds.gov.in/pages/complaint.xhtml
TNPDS Facebook Page Link - https://www.facebook.com/tnepds
TNPDS Twitter Page Link - https://twitter.com/தனிபிட்ஸ்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2