ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவசக்கல்வி தருகிறோம்-சிவகங்கையில் தனியார் பள்ளி அறிவிப்பு
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இலவசக்கல்வி தருகிறோம்- சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ மேல்நிலைப்பள்ளி அறிவிப்பு
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இலவசக்கல்வி தருகிறோம்- சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ மேல்நிலைப்பள்ளி அறிவிப்பு
சிவகங்கையில் உள்ள பிரபல மௌண்ட் லிட்ரா ஜீ மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தோரின் குழந்தைகளுக்கு இலவசக்கல்வி அளிப்பதாக அறிவித்துள்ளது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஸ்ரீமீனாட்சி கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பாக சிவகங்கை கண்டாங்கிப்பட்டியில் மௌண்ட் லிட்ரா ஜீ மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. இப்பள்ளியானது மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் அங்கீகாரத்துடன் மழலையர் பிரிவு முதல் பதினோராம் வகுப்பு வரையிலான பாடங்களை சிறப்பான முறையில் கற்பித்து வருகின்றது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று தொடங்கிய நிலையில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் பாதிக்காத வண்ணம் ஆன்லைன் வகுப்புகளை கடந்த ஏப்ரல் மாதம் முதலாகவே நடத்தி வருகின்றனர்.
தற்போது கொரோனா இரண்டாவது அலை மக்களிடையே அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்றாலும் சில பகுதிகளில் உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த கோல கட்டத்தில் பள்ளியின் தலைவர் பால.கார்த்திகேயன் கூறியதாவது . சென்ற ஆண்டு கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்ட அனைத்து துறை அலுவலர்களின் குழந்தைகளுக்கும் 50% கல்வி உதவித்தொகை வழங்கி அவர்களுக்கான சிறப்பு பயிற்சிகள், பாடவகுப்புகளை இணையவழி வாயிலாக நடத்தி வந்தோம்.
அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு கட்டணச்சலுகைகளை அறிவித்து பெற்றோர்களின் பொருளாதார சுமைகளை நாங்களும் பகிர்ந்து கொண்டோம். தற்போது கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில் தனது பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு இலவசக்கல்வி அளிக்க முடிவுசெய்துள்ளோம். இதற்கான விண்ணப்பங்கள் எங்கள் பள்ளி அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்றால் இறந்தமைக்கான மருத்துவச்சான்றிதழ்கள் மற்றும் இறப்புச்சான்றிதழ்களை சமர்ப்பித்து குழந்தைகளின் பொறுப்பாளர்கள் எங்கள் பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளலாம்.
முன்னதாக அறிவித்துள்ள மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களுக்கான கல்விக்கட்டணச் சலுகைகளை இந்த ஆண்டும் தொடர்ச்சியாக வழங்கிட உள்ளோம். அதேபோல் வசதியற்ற திறமையான மாணவர்களுக்கும் இலவசக்கல்வியினை எங்கள் அறக்கட்டளை சார்பில் வழங்குகின்றோம். அதற்கு அவர்களது முந்தைய ஆண்டுகளுக்கான கல்வித்தேர்ச்சி சான்றிதழ்களை சமர்ப்பித்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். எங்களின் நோக்கம் பொருளாதார நெருக்கடியினால் திறமையான மாணவ சமூகம் பாதிக்கப்பட கூடாது என்பதே ஆகும். விண்ணப்பங்கள் பெற 9150519505 என்ற அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்" என்றார்.
மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் பாதிக்கப்படாத வகையில் பல்வேறு புதுமை முயற்சிகளை எடுத்து செயலாற்றி வரும் பள்ளிநிர்வாகத்தை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.