காய்கறிகள் மழையில் நனைந்து சேதம்,பாதிப்பில்லாத இடத்தை ஒதுக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வந்து விளக்கு பகுதியில் அண்ணா தினசரி சந்தை இயங்கி வந்தது. கொரானா தொற்று பரவலையடுத்து தமிழகமெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தினசரி சந்தைகள் மூடப்பட்டதால் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இயங்கி வந்த அண்ணா தினசரி சந்தை மாற்று இடம் ஒதுக்கப்பட்டு இன்று காரைக்குடி பெரியார் சிலை அருகே 100 அடி சாலையில் இயங்கி வந்தது.
திடீரென்று மழை கொட்டியதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், சாலையோரம் போடப்பட்டிருந்த காய்கறிகள் மழைநீரில் மிதந்து சென்றன.
வெங்காயம், தக்காளி ,பச்சை மிளகாய் உட்பட பல காய்கறிகள் நீரில் நனைந்தன.இதனால் பெருத்த நஷ்டம் அடைந்ததாக வேதனை தெரிவித்த விவசாயிகள், கொரானா காலம் முடியும்வரை தங்களுக்கு மழை, வெயில் காலங்களில் பாதிப்பில்லாமல் வியாபாரம் செய்ய தகுந்த இடம் ஒதுக்கி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர்.