நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தொடர்ந்து வந்த புகாரின் அடிப்படையில் சிவகங்கையில் நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரரென சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத ரூ1 லட்சம் பணம் சிக்கியது.

Update: 2020-12-25 04:52 GMT

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டதில் துனை இயக்குநர் அறையில் வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத 1 லட்ச ரூபாயை கைப்பற்றி விசாரனை மேற்கொண்டுவருகின்றனர். 

சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகமானது செயல்பட்டுவருகிறது. இங்கு புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கான அப்ரூவல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் அங்கு அதிகமாக லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புதுறை போலீசாருக்கு தொடர்ச்சியாக புகார் வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று டி.எஸ்.பி கருப்பையா, தலைமையில் ஆய்வாளர்கள் குமரவேல், சந்திரன் சார்பு ஆய்வாளர் ராஜாமுகமது உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்டோர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் துனை இயக்குநர் நாகராஜன் அறையில் கணக்கில் வராத 1 லட்ச ரூபாய் வைத்திருந்ததை கைப்பற்றி அவரிடம் விசாரனை மேற்கொண்டனர். மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியதும் 1 லட்ச ரூபாயை கைப்பற்றியதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News