வட்டார வளர்ச்சி அலுவலர் தற்கொலை முயற்சி உயரதிகாரிகள் டார்ச்சர் காரணமா ?

Update: 2020-12-28 07:50 GMT

சிவகங்கையில் வட்டார வளர்ச்சி அலுவலர் உயர் அதிகாரிகளின் டார்ச்சரால் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்துவருபவர் ரமேஷ். இவருக்கு தமிழ்ச்செல்வி என்கிற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் இவருக்கு ஓய்வுபெறும் வயதை எட்டிய நிலையில் கொரோனா பரவல் தடுப்பு பணியின்போது 1 ஆண்டு காலம் பணி நீட்டிப்பு செய்து அரசானை வெளியிடப்பட்ட போது இவருக்கும் பணி நீட்டிப்பு செய்யப்பட்டது. இன்நிலையில் இவருக்கு கடந்த ஒரு வார காலமாக பணிச்சுமை அதிகமாக இருந்ததால் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் மேலதிகாரிகள் டார்ச்சர் செய்து வந்ததாகவும் கூறப்படும் நிலையில் இன்று இவர் தனது வீட்டில் இருந்து காலை வெளியில் வந்தவர் அருகில் இருந்த முள் காட்டுக்குள் சென்று தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News