சிவகங்கையில் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் அரசினர் குடியிருப்பு உள்ளதால் அதை பராமரிப்பு செய்து தர குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகமானது கடந்த 1982 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இன்நிலையில் இங்கு சுமார் 50 துறைகளுக்கான அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் எளிதாக அலுவலகம் வந்து செல்ல ஆட்சியர் அலுவலக வளாகம் அருகிலேயே பொதுப்பணித்துறையின் சார்பில் ஊழியர்களின் தகுதிக்கேற்ப ஏ.பி.சி.டி என பல்வேறு வசதிகளுடன் கூடிய சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் அடங்கிய அடுக்கு மாடி குடியிருப்பும் கட்டி முடிக்கப்பட்டு ஊழியர்களுக்கு குறைந்த வாடகையில் வீடுகள் வழங்கப்பட்டது.
இதில் அனைத்து வீடுகளிலும் ஊழியர்கள் குடியிருந்து வந்த நிலையில் 38 ஆண்டுகளை கடந்த நிலையில் ஒவ்வொரு குடியிருப்புகளாக உரிய பராமரிப்பின்றி மேற்கூரைகள் சேதமடைந்தும் சிதிலமடையவும் தொடஙகியதால் பெரும்பாலான குடியிருப்புகளை காலிசெய்த ஊழியர்கள் தனியாரிடம் அதிக வாடகை கொடுத்து வீட்டில் குடியிருந்து வருகின்றனர்.அதிக வாடகை கொடுக்க முடியாதவர்கள் அங்கேயே தங்கியுள்ளனர். எனவே இந்த குடியிருப்புகளை முறையாக பராமரித்து தரவும் விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக நடவடிக்கை எடுக்கவும் குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.