தமிழ்நாட்டில் பின்னடைவை சந்தித்துள்ள பா.ஜ வேட்பாளர்கள் யார்..?

பரபரப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. சில இடங்களில் எதிர்பாராத முடிவுகளும் வந்துள்ளன.

Update: 2024-06-04 09:19 GMT

பாஜ முக்கிய தேர்தல் வேட்பாளர்களான தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன் 

Setback Bjp Candidates in Tamil Nadu, Election Result 2024, Annamalai, L.Murugan, Tamilsai Soundararajan,Pon.Radhakirishanan, Nayinar Nagendran, Radhika Sarathkumar

இந்தியா முழுவதும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இந்தியா முழுவதும் நடைபெற்ற தேர்தலின் போது பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி எண்ணப்பட்டு வருகிறது. இதில் அகில இந்திய அளவில் பாஜ கூட்டணி வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.

Setback Bjp Candidates in Tamil Nadu

ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி வேட்பாளர்கள் தான் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளனர். இரண்டாவது இடத்தை பிடிப்பதில் பாஜவிற்கும் அதிமுகவிற்கும் கடுமையான போட்டி நிலவுறது. ஒரு சில இடங்களில் நாம் தமிழர் கட்சியும் போட்டி போட்டு வாக்குகளை பெற்றுள்ளது.

இன்னும் சொல்லப்போனால் அதிமுக பல தொகுதிகளில் நான்காம் இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளது அக்கட்சி தொடந்தர்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்ட கோவை நாடாளுமன்ற தொகுதி மிக முக்கியமான தொகுதியாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த தொகுதியில் அண்ணாமலை வெற்றி பெறுவார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால் தொடக்கத்தில் முன்னைலை பெற்றுவந்த அண்ணாமலை பின்னுக்குத் தள்ளப்பட்டார்.

Setback Bjp Candidates in Tamil Nadu

கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை வைக்கிறார். இரண்டாவது இடத்தில் அண்ணாமலை உள்ளார். அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த நிலை தொடருமா அல்லது அதிமுக இரண்டாவது இடத்தை பிடிக்குமா என்பது போக போகத்தான் தெரியவரும்.

தமிழகம் முழுவதும் பாஜ சார்பில் ஏராளமான விஐபிக்கள் தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பின்னடைவைச் சந்துய்த்துள்ளனர்.

Setback Bjp Candidates in Tamil Nadu

தமிழ்நாட்டில் பாஜக நட்சத்திர வேட்பாளர்கள் பின்னடைவு

1. தென் சென்னை - தமிழிசை சௌந்தரராஜன்

2. மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம்

3. வட சென்னை - பால் கனகராஜ்

4. நீலகிரி - எல்.முருகன்

5. கோவை - அண்ணாமலை

6. நெல்லை - நயினார் நாகேந்திரன்

Setback Bjp Candidates in Tamil Nadu

7. கன்னியாகுமரி - பொன்.ராதாகிருஷ்ணன்

8. தஞ்சை - கருப்பு முருகானந்தம்

9. சிதம்பரம் - கார்த்திகாயினி

10. மதுரை - ராம சீனிவாசன்

11. விருதுநகர் - ராதிகா சரத்குமார்

Tags:    

Similar News