சீமான் மயங்கி கீழே விழுந்ததால் பரபரப்பு: ஆம்புலன்ஸ்சில் முதலுதவி
திருவொற்றியூரில், செய்தியாளர் சந்திப்பின் போது, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மயங்கி கீழே விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
கூட்டத்தில் மயங்கி விழுந்த சீமான்.
நாம் தமிழக் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று சென்னை திருவொற்றியூரில், பொதுமக்கள் முன்பு உரையாற்றிக் கொண்டிருந்தார். பின்னர், திருவொற்றியூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர் சந்திப்பின்போது, திடீரென சீமான் மயங்கி விழுந்தார். இதனைத்தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்ஸில் முதலுதவி சிகிச்சை அளித்தபின், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது காரில் புறப்பட்டு சென்றார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.