விற்பனை வாகன அங்காடி: மாற்றுத்திறனாளிக ளுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு

தமிழ்நாடு முழுவதும் 100 ”மதி எக்ஸ்பிரஸ்” மாற்றுத்திறனாளி சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ளது

Update: 2023-06-08 17:00 GMT

பைல் படம்

AAP 2023-2024 ம் ஆண்டு செயல்திட்டதின்படி E-CART (Mathi Express) தமிழ்நாடு முழுவதும் 100 ”மதி எக்ஸ்பிரஸ்” மாற்றுத்திறனாளி சுய உதவிக்குழுஉறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மட்டும் 3எண்ணிக்கை ”மதி எக்ஸ்பிரஸ்” ஒதுக்கீடு செய்யப்பட்டு (ஒன்று ரூ.3.25 இலட்சம் மதிப்பீட்டில்) தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளி சுய உதவிக்குழு உறுப்பினருக்கு வழங்கப்படவுள்ளது.

மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட, விதவை மகளிர் மாற்றுத் திறனாளிகள், ஆண் மாற்றுத் திறனாளி களுக்கு மட்டுமே விற்பனை வாகன அங்காடி வழங்கப்படவுள்ளது. விண்ணப்பம் செய்யும் மாற்றுத் திறனாளி சுய உதவிக் குழுவினருக்கு கீழ்க்கண்ட தகுதிகள் இருத்தல் அவசியம் .

தேர்வு செய்யப்படும் சுய உதவிக் குழு தேசிய ஊரக வாழ்வாதார இயக்க இணையத்தில் (NRLM Portal) பதிவு பெற்றிருத்தல் அவசியம். பொருட்கள் உற்பத்தி / விற்பனையில் ஆர்வம் மற்றும் முன்அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும். சிறப்பு சுய உதவிக்குழு தொடங்கி ஓர் ஆண்டு முடிவடைந்து இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் உறுப்பினர் மீது எவ்வித புகார்களும் இல்லை என்பதையும் வங்கி மற்றும் சமுதாய அமைப்புகளில் வராக்கடன் ஏதுமில்லை எனவும் சான்றிதழ் வழங்க வேண்டும்.

மதி எக்ஸ்பிரஸ்க்கு வாடகை ஏதும் கிடையாது. பராமரிப்பு செலவினங்களை சம்பந்தப்பட்ட பயனாளியே மேற்கொள்ள வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட தகுதியுடைய பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் நலிவுற்ற குடும்ப உறுப்பினர்களை கொண்ட மாற்றுத் திறனாளி உறுப்பினருக்கு முன்னுரிமை அடிப்படையில் மாவட்ட அளவிலான தேர்வுக் குழு இறுதி செய்யும் உறுப்பினருக்கு வழங்கப்படும்.

இவ்வாறு வழங்கப்பட்ட மூன்று சக்கர வாகனங்களில் கீழ்க்கண்ட பொருட்களை விற்பனைக்கு வைக்க வேண்டும். வாகன அங்காடி ஒதுக்கப்பட்ட மாற்றுத் திறனாளி சுயஉதவிக்குழு உறுப்பினர் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருள் மட்டுமல்லாது மாவட்டத்தில் உள்ள அனைத்து சுய உதவிக்குழு உற்பத்திப் பொருட்களையும் விற்பனைக்கு வைக்கப்பட வேண்டும். விற்பனை செய்யப்படும் பொருள் 50 சதவிகிதம் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருளாக இருத்தல் வேண்டும்.

சிறுதானிய உற்பத்திப் பொருட்களை முக்கியமாக விற்பனை செய்தல் வேண்டும். இதன் மூலம் ஆரோக்கியமான சிறுதானிய உணவுப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படும். அனைத்து உணவுப் பொருட்களுக்கும் FSSAI உணவு தரக் கட்டுப்பாட்டுத் துறை சான்று பெற்றிருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு / உற்பத்தியாளர் குழு / வேளாண் பண்ணை தொகுப்பு / சிறுதொழில் தொகுப்பு / பெண் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தயாரிப்பு பொருட்கள் மட்டுமே விற்பனைக்கு வைத்திட வேண்டும்.

அரசால் தடை செய்யப்பட்ட எவ்வித பொருட்களும் விற்பனை செய்யக் கூடாது. விண்ணப்பங்களை இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM), DSMS வணிக வளாகம், காட்டு புதுக்குளம், புதிய பேருந்து நிலையம் அருகில், புதுக்கோட்டை 622001- என்ற முகவரியில் அனுப்ப  வேண்டும்  என மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News