ஓமலூர் பள்ளியில் உலக காடுகள் தினம் கொண்டாட்டம்
ஓமலூர் பள்ளியில் பசுமை தோழி அனிஷாராணி தலைமையில் உலக காடுகள் தினம் கொண்டாட்டம்;

காடுகள் தினம் கொண்டாட்டம்
ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக காடுகள் தினம் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை கோசலை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த மஞ்சப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாணவர்கள் காடுகளின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு குறித்த முழக்கங்களை எழுப்பினர். பின்னர் பள்ளி வளாகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஒன்றிணைந்து மரக்கன்றுகள் நட்டனர். இந்நிகழ்வில் சேலம் மாவட்ட நிர்வாகத்தால் நியமனம் செய்யப்பட்ட பசுமை தோழி அனிஷாராணி, பள்ளி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ் மற்றும் என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு காடுகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.