சேலம் வினாயகா மிஷன்ஸ் பல்கலையில் 'வின்ஸ்போர்ட்ஸ் 2025' விழா
பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தலைமையில் 'வின்ஸ்போர்ட்ஸ் 2025' நிறைவு விழா;
விநாயகா மிஷன்ஸ் பல்கலையில் இன்று 'வின்ஸ்போர்ட்ஸ் 2025' நிறைவு விழா
சேலம்:சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலையின் வருடாந்திர விளையாட்டு போட்டி 'வின்ஸ்போர்ட்ஸ் - 2025' நேற்று துவங்கியது.
பல்கலையின் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சரவணன் அவர்கள் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி போட்டிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பல்கலை துணைவேந்தர் கதிர் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
இன்று நடைபெறும் நிறைவு விழாவில் அர்ஜூனா, கேல் ரத்னா, பத்மஸ்ரீ ஆகிய உயரிய விருதுகளை பெற்ற பாராலிம்பிக் தடகள வீரர் மாரியப்பன் அவர்கள் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். அவர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்குகிறார். மேலும், பல்கலை பதிவாளர் நாகப்பன் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இந்நிகழ்வின் ஏற்பாடுகளை பல்கலை மாணவர் நல இயக்குனர் சண்முக சுந்தரம், விநாயகா மிஷன்ஸ் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சரவணன், இயக்குனர் பினோத் மற்றும் மாணவ, மாணவியர்கள் செய்து வருகின்றனர். நிகழ்வில் பல்கலை இயக்குனர்கள், அனைத்து உறுப்பு கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர்.