329 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.42.72 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை சென்றடையச் செய்ததில் சிறந்த மாவட்டமாக சேலம் மாவட்டம் செயல்பட்டு வருகிறது.

Update: 2023-04-03 16:33 GMT

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.42.72 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

சேலம் மாநகராட்சி, தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் இன்று (03.04.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் 329 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.42.72 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்கள்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடையச் செய்ததில் இந்தியாவிலேயே சிறந்த மாவட்டமாக சேலம் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டு திகழ்வதற்கு எனது வாழ்த்துகளை மாவட்ட நிர்வாகத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன். சேலம் மாவட்டத்தில் தற்பொழுது வரை 71,776 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 12,609 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.58.06 கோடியும், 4,907 மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.1.44 கோடியும், 698 பயனாளிகளுக்கு சிறப்புப் பள்ளிகள் மற்றும் உணவூட்டும் மானியமாக ரூ.1.62 கோடியும், 1,375 பயனாளிகளுக்கு கூட்டுறவு வங்கிக்கடனாக ரூ.6.55 கோடியும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 50 பயனாளிகளுக்கு ரூ.27.35 இலட்சம் மதிப்பில் செயற்கை அவயங்களும், 129 பயனாளிகளுக்கு ரூ.12.97 இலட்சம் மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள்களும், 97 நபர்களுக்கு ரூ.9.41 இலட்சம் மதிப்பில் சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், 254 பயனாளிகளுக்கு ரூ.24.00 இலட்சம் மதிப்பில் தையல் இயந்திரங்களும், 20 பயனாளிகளுக்கு ரூ.21.20 இலட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளும், 349 பயனாளிகளுக்கு ரூ.1.95 கோடி மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருந்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 74 பயனாளிகளுக்கு ரூ.77.07 இலட்சம் மதிப்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இணைப்பு சக்கரம் பொருந்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 662 பயனாளிகளுக்கு ரூ.82.75 இலட்சம் மதிப்பில் ஸ்மார்ட் போன்களும், காதொலி கருவி வழங்கும் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.2.97 இலட்சம் மதிப்பில் காதொலி கருவிகளும், 140 பயனாளிகளுக்கு 5.2.17 இலட்சம் மதிப்பில் பிரெய்லி கடிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 21,474 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.74.45 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் 10 நபர்களுக்கு ரூ.8.35 இலட்சம் மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 15 நபர்களுக்கு ரூ.1.51 இலட்சம் மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்களும், 200 நபர்களுக்கு ரூ.25 இலட்சம் மதிப்பிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பேசி, 100 நபர்களுக்கு ரூ.6.88 இலட்சம் மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், 1 நபருக்கு ரூ.0.73 இலட்சம் மதிப்பிலான நவீன செயற்கை கால் மற்றும் 3 நபர்களுக்கு ரூ.0.26 இலட்சம் மதிப்பிலான நவீன சக்கர நாற்காலி என மொத்தம் 329 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.42.72 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 38 மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் தெரிவித்தார்

Tags:    

Similar News