சேலத்தில் வி.சி. கட்சியின் ஆர்ப்பாட்டம்

வி.சி. கட்சியின் ஆர்ப்பாட்டம், திருமாவளவன் படத்தை சேதப்படுத்திய கும்பலை கைது செய்ய வலியுறுத்தல்;

Update: 2025-03-21 10:10 GMT

வி.சி.கே. கட்சி சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழகத்தில் ஜாதி வெறியர்களால் பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து ஏவப்படும் வன்முறையை கண்டித்தும், திருமாவளவன் படத்தை சேதப்படுத்திய கும்பலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட துணை செயலர் காயத்ரி, மாவட்ட செயலர் சுந்தர் உள்ளிட்ட பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். எனினும், அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதால், 130 பேரை காவல்துறையினர் கைது செய்து, அவர்களை ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags:    

Similar News