சேலம் மாவட்டத்தில் 81,473 பேருக்கு தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் 81,473 பேருக்கு நேற்று நடந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.;
சேலம் மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதில் முதல் டோஸ் தடுப்பூசியை 47,903 பேர் செலுத்திக் கொண்டனர். 2வது டோஸ் தடுப்பூசியை 33, 570 பேர் செலுத்திக் கொண்டனர்.
இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் நடந்த கொரோனா சிறப்பு முகாமில் 81,473 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.