ஜெய் ஈமு பார்ம்ஸ் நிறுவனத்தின் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் பொது ஏலம்
ஜெய் ஈமு பார்ம்ஸ் நிறுவனத்தின் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்படவுள்ளன.
ஜெய் ஈமு பார்ம்ஸ் நிறுவனத்தின் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்படவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன்கள் பாதுகாப்புச் சட்டம், 1997 (தமிழ்நாடு சட்டம் 44/97), பிரிவு 3-ன் கீழ் அரசாணை எண்-128, உள் (காவல்-XIX) துறை, நாள்-21.02.2014 மற்றும் அரசாணை எண்-846, உள் (காவல்-XIX) துறை, நாள்-28.11.2016-ன்படி இடைமுடக்கம் செய்யப்பட்ட, சட்டப்பிரிவு 4(3)-ன்படி கோவை டான்பிட் சிறப்பு நீதிமன்ற அசல் வழக்கு O.A. 12/2015, தீர்ப்பு நாள்-17.08.2015 மற்றும் O.A. 07/2017, தீர்ப்பு நாள்-11.04.2017 ஆகியவற்றில் அளித்துள்ள தீர்ப்பின் படி விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்ட தி/ள். ஜெய் ஈமு பார்ம்ஸ் நிறுவனத்தின் அசையும் சொத்துக்களான Bajaj Discover (Two Wheeler) Engine Number: JZMBUM92575, Chaises Number: MD2DSJZZZUWM42951, பதிவு எண்: TN 30 AP 9994 – ன் மதிப்பு ரூ.15,000/-;
Maruthi Omni Car Engine Number: F8BIN3758198, Chaises Number: MA3EVB1S00834038, பதிவு எண்: TN 23 AS 0442-ன் மதிப்பு ரூ.1,00,000/-; Tata 407 Tempo Engine Number: 497SQ21CQRT25548, Chaises Number: 357011CQQ807100, பதிவு எண்: TN 45 U 2323-ன் மதிப்பு ரூ. 1,25,000/- ; Maruthi Zen Car Engine Number: C10BIN201101, Chaises Number: MA3FYF31S00299360, பதிவு எண்: TN 29 C 3949-ன் மதிப்பு ரூ. 45,000/- ; Ape Truck Plus Engine Number: PLI14072003, Chaises Number: MBXo00ILBNL235531, பதிவு எண்: TN 52 C 9195 -ன் மதிப்பு ரூ. 1,10,000/-; ஆகிய சொத்துக்கள் 06.07.2023 அன்று காலை 10.30 மணியளவில், சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக மகிழம் கூட்ட அரங்கத்தில் (அறை எண்-115, முதல் தளம்) பொது ஏலம் விடப்பட உள்ளது.
ஏல நிபந்தனைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலக விளம்பர பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளன. ஏல நிபந்தனைகளுக்குட்பட்டு, ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள அனைவரும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
மேற்படி நிறுவனத்தின் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், சொர்ணபுரி, சேலம் மற்றும் 340, பஞ்சவர்ணம் நகர், அழகாபுரம், சேலம் மேற்கு வட்டம் என்ற முகவரியில் உள்ள சேலம் பொருளாதார குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றை ஏல தேதிக்கு முன்பாக, சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் மூலம் பார்வையிடலாம். இவ்வாறு மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ. மேனகா தெரிவித்துள்ளார்.