சேலத்தில் பைக் திருட்டு சம்பவம், இரண்டு திருடர்கள் கைது

போலீசாரின் தீவிர விசாரணை மூலம்,பைக் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு திருடர்களை கைது செய்து பைக் மீட்பு;

Update: 2025-04-02 07:20 GMT

 பைக் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்

சேலம் அங்கம்மாள் காலனி, குப்தா நகரைச் சேர்ந்த 38 வயதான லட்சுமிகாந்தன் கடந்த 27ம் தேதி தனது வீட்டின் முன்பாக 'பல்சர்' பைக்கை நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலை அந்த பைக் திருடப்பட்டிருப்பதைக் கண்டறிந்த அவர் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஆத்தூர் புதுப்பேட்டையைச் சேர்ந்த 22 வயதான திருமன் மற்றும் புதுப்பள்ளத்தைச் சேர்ந்த 20 வயதான சஞ்சய் ஆகியோர் அந்த பைக்கை திருடியது தெரியவந்தது. இதையடுத்து பள்ளப்பட்டி போலீசார் இருவரையும் கைது செய்து, திருடப்பட்ட பைக்கை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல், அங்கம்மாள் காலனியைச் சேர்ந்த 50 வயதான சுரேஷ் கடந்த டிசம்பர் 23ம் தேதி தனது 'ஜூபிடர்' மொபட்டை 5 தியேட்டர் அருகே நிறுத்திவிட்டு அருகிலிருந்த கடைக்குச் சென்றார். அவர் திரும்பி வந்தபோது மொபட்டைக் காணவில்லை. இது தொடர்பாக அவர் நேற்று முன்தினம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News