சங்ககிரியில் இன்று 3ம் கட்ட "மாபெரும் தமிழ்க் கனவு" நிகழ்ச்சி
Salem news today: சேலம் மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக "மாபெரும் தமிழ்க் கனவு" நிகழ்ச்சி சங்ககிரியில் இன்று நடைபெறவுள்ளது.
சேலம் மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக "மாபெரும் தமிழ்க் கனவு" நிகழ்ச்சி சங்ககிரியில் இன்று (30.03.2023) நடைபெறவுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மூன்றாம் கட்டமாக "மாபெரும் தமிழ்க் கனவு" நிகழ்ச்சி இன்று சங்ககிரி, வீராச்சிபாளையம், விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களை பன்முகத் திறன்மிக்கவர்களாக முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் தொன்மையினை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு "மாபெரும் தமிழ்க் கனவு" நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக கடந்த 23.02.2023 அன்று மாசிநாயக்கன்பட்டியிலும், இரண்டாம் கட்டமாக 17.03.2023 அன்று தலைவாசலிலும் நடைபெற்ற "மாபெரும் தமிழ்க் கனவு" நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு கருத்துரை ஆற்றினார்கள்.
அதனைத்தொடர்ந்து, தற்போது மூன்றாம் கட்டமாக சேலம் மாவட்டத்தில் வருகின்ற 30.03.2023 இன்று காலை 10 மணிக்கு சங்ககிரி, வீராச்சிபாளையம், விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் "மாபெரும் தமிழ்க் கனவு" நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் "சித்தர் சிந்தனை மரபு" என்ற தலைப்பில் பேராசிரியர் கரு.ஆறுமுகத்தமிழன் அவர்களும், "காணமல்போன புதையல்" என்ற தலைப்பில் ஊடகவியலாளர் செந்தில் வேல் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு கருத்துரை ஆற்றவுள்ளார்கள்.
எனவே, சேலம் மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக நடைபெறவுள்ள "மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை" நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது.