மல்லசமுத்திரம் சின்ன மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
மல்லசமுத்திரம் சின்ன மாரியம்மன் கோவிலில்வரும் 3ல் குண்டம் திருவிழா;
சின்ன மாரியம்மன் கோவிலில் வரும் 3ல் குண்டம் திருவிழா நடைபெறுகிறது
மல்லசமுத்திரம் சின்ன மாரியம்மன் கோவிலில் கடந்த 20ம் தேதி கம்பம் நடுதலுடன் திருவிழா தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நாளை காலை 6:00 மணிக்கு பூவோடு எடுத்தல், மதியம் 3:00 மணிக்கு அம்மனுக்கு உலுப்பை கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 3ம் தேதி காலை 4:00 மணிக்கு மாதேஸ்வரன் கோவிலில் இருந்து பக்தர்கள் அக்னிகரகம் எடுத்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து காலை 6:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்பின் பொங்கல் வைபவம் மற்றும் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாலை 5:00 மணிக்கு பூங்கரகம் எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். 4ம் தேதியன்று சிலம்பாட்டம், வண்டி வேடிக்கை, பொய்க்கால் குதிரை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. விழா காலம் முழுவதும் தினமும் இரவு 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதிஉலா வருகிறார். இத்திருவிழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் அறங்காவலர் குழுவினர், பெரியகொல்லப்பட்டி, சின்னகொல்லப்பட்டி ஊர் பொதுமக்கள் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.