சேலத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலத்தில் முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படையில் பணிபுரிவோரின் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 12ம் தேதி நடைபெறவுள்ளது.

Update: 2024-01-05 03:33 GMT

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம்.

சேலத்தில் முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படையில் பணிபுரிவோரின் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 12ம் தேதி நடைபெறவுள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படையில் பணிபுரிவோரின் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 12.01.2024 அன்று நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோரின் சார்ந்தோர்களுக்காகவும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், தொழில்முனைவோர் கருத்தரங்கு மற்றும் முப்படைவீரர் வாரியக் கூட்டம் வருகின்ற 12.01.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடத்தப்பட உள்ளது.

மேற்படி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் சார்ந்தோர்களும் தங்களது கோரிக்கைகளை இரட்டைப் பிரதிகளில் விண்ணப்பம் வாயிலாக நேரில் சமர்ப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பம் சமர்ப்பிக்கவுள்ள முன்னாள் படைவீரர்கள் அன்றைய தினம் 10.00 மணிக்குள் தங்களது விண்ணப்பத்தை முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News