தேவூர் அருகே செங்கானூர் பழனி ஆண்டவர் கோவிலில் தைப்பூச திருவிழா
தேவூர் அருகே செங்கானூர் பழனி ஆண்டவர் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்றது.;
சேலம் மாவட்டம், தேவூர் அருகே கோனேரிப்பட்டி அக்ரகாரம் ஊராட்சி செங்கானூர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பழனியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா ஆண்டுதோறும் தை மாதம் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் தைப்பூசத் திருவிழாவில் பழநி ஆண்டவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பன்னீர் அபிஷேகம் பால் அபிஷேகம் பஞ்சாமிர்தம் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பூஜைகள் தீபாரதனை செய்யப்பட்டது.
இதில் செங்கானூர் சுற்றுவட்டார கிராமப்புற மக்கள் திரளாக கலந்து கொண்டு மயில் காவடி வேல் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து வலம் வந்தனர்.
மேலும் திரளான மக்கள் மக்கள் முடிக்காணிக்கை அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேத்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.