அரசிராமணி குள்ளம்பட்டி பகுதியில் பட்டா திருத்த சிறப்பு முகாம்
அரசிராமணி குள்ளம்பட்டி பகுதியில், பட்டா சிறு திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
குமாரபாளையம் அருகே, சேலம் மாவட்டம் எல்லைப்பகுதியில் உள்ள தேவூர், அரசிராமணி குள்ளம்பட்டி, செட்டிபட்டி, சின்னாம்பாளையம், குறுக்குபாறையூர், மூலப்பாதை, பாரதி நகர், பழக்காரன்காடு, ஒலப்பாளையம், புளியம்பட்டி குஞ்சாம்பாளையம், எல்லப்பாளையம், கல்லம்பாளையம், மலைமாரியம்மன் கோவில், வெள்ளூற்று, ஒடசக்கரை, ஆரையான்காடு, பகுதிகள் அமைந்துள்ளன.
இப்பகுதிகளில் உள்ள கிராம விவசாயிகள், மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா, சிட்டாவில் உள்ள பிழைகளை திருத்தம் செய்தல் பட்டா மாறுதல், மற்றும் நிலம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் ,மற்றும் வீட்டு உரிமையாளர்கள், தங்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஏதுவாக, ஆவணங்களுடன் சிறப்பு முகாமில் 250மனுக்கள் அளித்தனர்.
பட்டா மாறுதல், பட்டாவில் பிழை திருத்தம், உள்ளிட்ட 47 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. அவர்களுக்கு, சங்ககிரி வருவாய் கோட்டாச்சியர் வேடியப்பன், சான்றிதழ் வழங்கினார். இதில் சங்ககிரி தாசில்தார் பானுமதி துணை தாசில்தார் ஜெயகுமார், தேவூர் வருவாய் ஆய்வாளர் சத்யராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஸ்ரீதர் பிரதீப்குமார் கருப்பண்ணன் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.