காலில் விழுந்த பாமக எம்.எல்.ஏ: கண்டுக்கொள்ளாத இபிஎஸ்
சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள், திடீரென இபிஎஸ் காலில் விழுந்தும் அதனை எடப்பாடி பழனிச்சாமி சிறிதும் கண்டு கொள்ளவில்லை
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி பகுதியில் கபடி உள் விளையாட்டு அரங்கத்தை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் கபடி போட்டியை துவக்கி வைத்து வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள், திடீரென மேடையில் நின்றிருந்த இபிஎஸ் காலில் விழுந்தார். ஆனால் இதனை எடப்பாடி பழனிச்சாமி சிறிதும் கண்டு கொள்ளவில்லை. மேலும் இரண்டு, மூன்று முறை பாமக எம்எல்ஏ அருள் வணக்கம் செலுத்திய போதும், இபிஎஸ்கண்டுகொள்ளாமல், அதிமுகவினருக்கு சால்வை அணிவிக்க வைத்தார். ஆனாலும் விடாமல், தொடர்ச்சியாக வணக்கம் செலுத்தியவாறு இபிஎஸ்அருகே அருள் சென்றார்.
அப்போது வேண்டா வெறுப்பாக அவரை வரவேற்ற இபிஎஸ், அருளுக்கு ஒரு சால்வை போடுங்கள் கூறினார்.இது பாமக கட்சியினரிடையே மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தியது.
காலில் விழுந்த பாமக எம்எல்ஏ அருளை , சினிமா பாணியில் எதுவும் கண்டு கொள்ளாத மாதிரி அவமதித்த எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கை பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சேலத்தில் நடக்கும் அரசு விழாக்களிலும், அமைச்சர் நேரு பங்கேற்கும் விழாக்களிலும் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் கலந்து கொண்டு, மிகவும் நெருக்கமாக அமைச்சர் மற்றும் திமுகவினரிடம் பழகி வருகிறார்.
இந்த நிலையில், பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள், எடப்பாடி பழனிச்சாமியின் காலில் விழுந்த சம்பவம் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தன்னை கவனிக்கவில்லை என்று அந்த பக்கமும் இந்த பக்கமும் திணறிய சட்டமன்ற உறுப்பினர் இறுதியாக , அவரது அருகிலேயே சென்று நின்றார். இதனால் செய்வதறியாது, விழா குழு சார்பில் அவருக்கு சால்வை அணிவிக்கும் படி அவர், தெரிவித்ததையடுத்து அவருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள எம்.எல்.ஏ. அருள், தன்னை விட ஒரு வயது மூத்தவராக இருந்தாலும் அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது என் பழக்கம். அந்த அடிப்படையில் தான் என்னைவிட வயதில் மூத்த இபிஎஸ் காலில் விழுந்தேன்.இதில் தவறு ஏதும் இல்லை எனக் கூறியுள்ளார்.