சேலம் மாவட்ட க்ரைம் செய்திகள்

Salem News,Salem News Today-வாழப்பாடி அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 3 பேரை அரிவாளால், வெட்டிவிட்டு காரில் தப்பிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்

Update: 2023-05-14 08:16 GMT

Salem News,Salem News Today- சேலம் மாவட்டத்தில் நடந்த குற்றச் சம்பவங்களின் தொகுப்பு (மாதிரி படம்)

3 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு காரில் தப்பிய கும்பல்; போலீசார் விசாரணை 

Salem News,Salem News Today.  சேலம் மெய்யனூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). இவர் பெத்தநாயக்கன்பாளைய துணை வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ளார். நேற்று இரவு 11 மணி அளவில் ஆறுமுகம், வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் தனது உறவினரின் பேக்கரியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு கும்பல் காரில் வந்தது. அவர்கள் திடீரென ஆறுமுகம் மற்றும் அங்கிருந்தவர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். மேலும் மிளகாய் பொடியை தூவி, செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர். அரிவாளால் வெட்டியதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் மற்றும் ஜனார்த்தனன், லட்சுமணன் ஆகியோர் காயமடைந்தனர். தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, துணை வட்டார வளர்ச்சி அலுவலரை அரிவாளால் வெட்டியவர்கள்  குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காரில் தப்பிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர். 

விபத்தில் வாலிபர் உயிரிழப்பு 

சேலம் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 19). இவரது நண்பர் விஜய் சாரதி (20). இவர்கள் 2 பேரும் நேற்று மோட்டார் பைக்கில் கருமலைக்கூடல் போலீஸ் ஸ்டேஷன் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் ஆம்புலன்ஸ் வாகனம், மோட்டார் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அருண்குமார் உயிரிழந்தார். விஜய் சாரதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். 

கஞ்சா விற்ற 4 பேர் கைது

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள காட்டூர் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த பழனியாண்டி (வயது 26), அதே ஊரைச் சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் (29) ஆகிய 2 பேரும் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.52 ஆயிரம் மதிப்புள்ள 5 கிலோ, 250 கிராம் கஞ்சா, ரூ.86 ஆயிரத்து 300 மற்றும் எலக்ட்ரானிக் கருவி, 5 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

இதேபோன்று நங்கவள்ளி போலீசார் டவர் நால்ரோடு பகுதியில் ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு மல்லிகுந்தத்தை சேர்ந்த வெங்கடேஷ் (20), பொதியம்பட்டியை சேர்ந்த பிரசாந்த் (26) ஆகிய 2 பேரும் கஞ்சா பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பேக்கரி ஊழியர் தற்கொலை 

அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள விளாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 31). இவர் கூட்டாத்துப்பட்டி பகுதியில் உள்ள பேக்கரி கடையில் ஊழியராக பணிசெய்தார். வயிற்று வலிக்காக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. நேற்று முன்தினம் அவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதையறிந்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர்  உயிரிழந்தார்.  காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பூட்டிய வீட்டுக்குள் ஆட்டோ டிரைவர் மர்ம சாவு 

சேலம் 4 ரோடு அருகே சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் உமாசங்கர் (வயது 45). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் உமாசங்கர், தனது தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில், பூட்டி இருந்த ஆட்டோ டிரைவர் உமாசங்கரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நேற்று பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் அங்குவந்து வீட்டுக்குள் பார்த்தனர். அப்போது அங்கு உமாசங்கர் மர்மமான முறையில், ஒரு அறையில் இறந்து கிடப்பது தெரியவந்தது.

மேலும், வீட்டிற்குள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள அவரது தாய் இருந்துள்ளார். பின்னர் ஆட்டோ டிரைவரின் உடலை போலீசார் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதனிடையே, உமாசங்கரின் சாவில் மர்மம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News