16 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை; போலீசார் விசாரணை

Salem News,Salem News Today- சேலம் அருகே, 16 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Update: 2023-05-13 15:15 GMT

Salem News,Salem News Today- 16 வயதில் கர்ப்பமான சிறுமிக்கு, பிறந்த ஆண் குழந்தை குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். (மாதிரி படம்) 

Salem News,Salem News Today - சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு, நேற்று வீட்டில் திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியை உறவினர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் அந்த சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையில், அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை எடை குறைவாக இருந்ததால், இன்குபேட்டரில் வைக்கப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார், மருத்துவமனைக்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினர். இதில் குழந்தையை பெற்றெடுத்த அந்த சிறுமிக்கு திருமணமாகவில்லை என்றும், உறவினர் ஒருவரை காதலித்து வந்ததும் தெரியவந்தது. எனவே, அவரை பிடித்து விசாரணை நடத்தினால் தான் முழு விவரமும் தெரியவரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சிறுமிக்கு குழந்தை பிறந்தது தொடர்பாக, மாவட்ட குழந்தைகள் நல மைய அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற சில மாவட்டங்களில் இதுபோன்று 18 வயதுக்கும் குறைவான சிறுபெண்கள், பாலியல் ரீதியாக, ஏமாற்றப்படுகின்றனர். காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி, விவரம் தெரியாத பெண்களை, தனியாக வீடுகளில் இருக்கும்  பெண்களை சுலபமாக ஏமாற்றி, அவர்களை இதுபோல், பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்கின்றனர். இதனால், அந்த வளரிளம் பெண்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அதுவும், இதுபோல் குழந்தைக்கு  தாயாகி விடும் பெண்களின் எதிர்காலம், கவலைக்குரியதாகி விடுகிறது. எனவே, பெண் அமைப்புகள் சார்பில், இதுபோல் உள்ள, போதிய வளர்ச்சி பெறாத கிராமங்களில் உள்ள பெண்களுக்கு, பாலியல், வன்புணர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கவுன்சிலிங் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். குறிப்பாக, பெண் குழந்தைகளின் பெற்றோர்கள், தாய்மார்களுக்கும் இதுபற்றிய பூரண விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம்.

Tags:    

Similar News