சேலம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்களிடம் கடன் பெற்று மோசடி: பெண் மேற்பார்வையாளர் மீது புகார்..!
சேலம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்களிடம் கடன் பெற்று மோசடி: பெண் மேற்பார்வையாளர் மீது புகார்.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;
சேலம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்களிடம் கடன் பெற்று ஏமாற்றியதாக, பெண் மேற்பார்வையாளர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் வெளிப்படுத்திய புகார்
சேலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் சிலர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு ஒன்றை அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "சேலம் அரசு மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறோம். இங்கு பெண் மேற்பார்வையாளராக இருந்த ஒருவர் குடும்ப கஷ்டம் என்று கூறி ஒப்பந்த பணியாளர்களிடம் கடனாக பணத்தை பெற்றுக் கொண்டார். ஒவ்வொரு பெண்களிடமும் தனித்தனியாக யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறி பணத்தை வாங்கினார்.இவ்வாறு மொத்தம் ரூ. 60,000 வரை அவர் பெற்றுக் கொண்டதாக ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர்.
பணம் திரும்ப கேட்டால் மிரட்டல்
இதுகுறித்து ஊழியர்கள் மேலும் கூறுகையில் எங்களிடம் இருந்து பெற்ற பணத்தை திருப்பி கொடுக்கக்கோரி அந்த மேற்பார்வையாளரை அணுகினோம். ஆனால் மிரட்டி விட்டார். மேலும் பணத்தை திரும்ப கேட்டால் எங்களுக்கு வேலையில் பிரச்சனை ஏற்படும் என்று மிரட்டியதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
தொடர் புகார்களை விசாரித்து நடவடிக்கை
இந்த விவகாரம் குறித்து மருத்துவமனை தரப்பில் கூறுகையில், "இதுபோன்று பல புகார்கள் வந்துள்ளன. அதனை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பணத்தை திரும்ப கேட்ட ஊழியர்களுக்கு நீதி கிடைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.