பணியில் இருந்த எஸ்.ஐ., வீரமுத்து மரணம்
கொங்கணாபுரம் போலீசார் எஸ்.ஐ., வீரமுத்து மரணம் – பணியில் இருந்தபோது மூச்சுத்திணறல்;
பணியில் இருந்த எஸ்.ஐ. மரணம்
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக (எஸ்.ஐ.) பணிபுரிந்து வந்த 59 வயதான வீரமுத்து அவர்கள் பணியில் இருந்தபோது திடீர் உடல்நலக் குறைவால் காலமானார்.
மேட்டூரில் வசித்து வந்த வீரமுத்து, சுமார் ஆறு மாதங்களுக்கு முன்புதான் கொங்கணாபுரம் காவல் நிலையத்திற்கு மாறுதலாகி வந்தார். கடந்த ஒரு மாதமாக மூச்சுத்திணறல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த வாரம் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்திருந்தார்.
நேற்று காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது, மதியம் 1:30 மணியளவில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு சக காவலர்கள் அவரை அழைத்துச் சென்றனர். ஆனால் நெஞ்சுவலி காரணமாக அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிசெய்தனர்.
வீரமுத்து அவர்களின் திடீர் மறைவு காவல்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.