சேலம் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரவேற்பு கூட அலுவலக உதவியாளர் பணி
சேலம் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரவேற்பு கூட அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.;
சேலம் அரசினர் (மகளிர்) தொழிற் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள ஒரு வரவேற்பு கூட அலுவலக உதவியாளர் (Front Office Assistant) தொழிற்பிரிவு பயிற்றுநர் பணியிடத்திற்கு 11 மாத காலத்திற்கு மட்டும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பூர்த்தி செய்திட தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் அரசினர் மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு (PPP) திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 1 வரவேற்பு கூட அலுவலக உதவியாளர் (Front Office Assistant) தொழிற்பிரிவு பயிற்றுநர் பணியிடத்திற்கு 11 மாத காலத்திற்கு மட்டும் மாதம் ஒன்றுக்கு ரூ.20,000/- ஊதியம் என்றவாறு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பூர்த்தி செய்திட தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க குறைந்த பட்ச வயது வரம்பு 21 ஆரும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வுகளும் உண்டு.
இப்பதவிக்கு விண்ணப்பபிப்பவர்கள் தங்களது பெயர், கல்வித்தகுதி தொழில்நுட்ப கல்வித்தகுதி முன் அனுபவம் சாதி, வீட்டு முகவரி, கைபேசி எண், ஆதார் நகல் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களுடன் கூடிய சுய விபர விண்ணப்ப படிவமாக தயார் செய்து கல்வித்தகுதி சான்றிதழ்களின் நகங்களுடன் தன் கையொப்பமிட்டு இணைத்து முதல்வர். அரசினர் (மகளிர்) தொழிற் பயிற்சி நிலையம், சேலம் 636 008 என்ற முகவரிக்கு 05.08.2022 மாமை 5.45மணிக்குள் தபால் மூலமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இப்பதவிக்கு B.VOC) வணிகவியலில் Hotel மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இவற்றில் ஏதாவது ஒன்றில் பல்கலைக் கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து பெறப்பட்ட பட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு பணியாற்றிய அனுபவமோ அல்லது Hotel மேனேஜ்மென்ட் / கேட்டரிங் டெக்னாலாஜி கமர்சியல் பிராக்டிஸ் இவற்றில் ஏதாவது ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து பெறப்பட்ட டிப்ளமோ ( குறைட்தபட்சம் இரண்டு ஆண்டுகள்) மற்றும் DGT-யிலிருந்து பெறப்பட்ட Advanced Diploma (Vocational) ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமோ அல்லது வரவேற்புடை அலுவலக உதவியாளர் தொழிற் பிரிவில் பயின்று NTCINAC தேர்ச்சி பெற்று சம்பத்தப்பட்ட துறையில் மூன்று ஆண்டுகள் பணியாற்றி வரவேற்புகூட அலுவலக உதவியாளர் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பங்கள் தேர்வு குழுவினரால் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுடையவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு அனுப்பப்படும். மேலும் விபரங்களுக்கு 0427-2403787: 9499055833 என்ற அலுவலக தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.
மேற்கண்ட நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ, தேர்காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யவோ முதல்வர் நிலைய மேலாண்மை குழு தலைவரி(IMC) அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்), சேலம் 8 அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.