சேலம் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள்: வெற்றிபெற்றவர்களுக்கு ஆட்சியர் பரிசுகள் வழங்கல்

சேலம் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

Update: 2024-01-08 14:32 GMT

மாவட்ட ஆட்சியரகத்தில் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய ஆட்சியர் கார்மேகம்.

சேலம் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இன்று (08.01.2024) மாவட்ட ஆட்சியரகத்தில் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட/ மாநில அளவிலான கலைப்போட்டிகள் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் மண்டலக் கலை பண்பாட்டு மையத்திற்குப்பட்ட சேலம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில், 14.10.2023 அன் று சேலம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடைபெற்றது.

இக்கலைப் போட்டியில் 80 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கிராமிய நடனக் கலைப் பிரிவு, ஓவியக் கலைப் பிரிவு, குரலிசைக் கலைப் பிரிவு, கருவியிசைக் கலைப் பிரிவு, பரதநாட்டியக் கலைப் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.6,000/- மும், இரண்டாம் பரிசாக ரூ.4,500/-மும், மூன்றாம் பரிசாக ரூ.3,500/-க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சேலம் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர்  நீலமேகன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News