திமுக மாமன்ற உறுப்பினரின் கணவர் பணம் கேட்டு மிரட்டல்

திமுக மாமன்ற உறுப்பினரின் கணவா் மீதும் நடவடிக்கை வேண்டி சேலம் மாநகராட்சி ஊழியர்களின் ஆா்ப்பாட்டம்;

Update: 2025-03-04 10:20 GMT

திமுக மாமன்ற உறுப்பினரின் கணவரை கண்டித்து மாநகராட்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம் மாநகராட்சியின் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் திங்கள்கிழமை அன்று தங்கள் பணிகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக மாநகராட்சி உறுப்பினரின் கணவர் பணம் கேட்டு மிரட்டுவதாக குற்றம் சாட்டி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மாநகராட்சியின் 48-வது வார்டு திமுக உறுப்பினராக விஜயா உள்ளார். இவரது கணவர் ராமலிங்கம் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் திட்டப் பணிகளைச் செய்யவிடாமலும், வரி வசூலிக்கும் ஊழியர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆர்ப்பாட்டத்தின்போது, மாநகராட்சி ஊழியர்கள் திமுக மாமன்ற உறுப்பினரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்ததாவது: "திமுக உறுப்பினர் விஜயா எந்தவொரு பணிக்கும் வருவதில்லை. அவருக்குப் பதிலாக அவரது கணவர் பணிசெய்யும் ஊழியர்களிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார். இவரது போக்கினால் மக்களிடம் வரிவசூல் செய்ய முடியாத நிலை உள்ளது."

இந்த விவகாரம் குறித்து மாநகராட்சி துணை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News