சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் 18 ம் ஆண்டு திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி
thiruvembavai recitation competition,2023 சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் திருவெம்பாவை பெருவிழாக்கழகம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 18 ம் ஆண்டு திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியானது நடந்தது.;
thiruvembavai recitation competition,2023
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் திருவெம்பாவை பெருவிழாக்கழம் சார்பில் 18 ம் ஆண்டு திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியானது நடந்தது.ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் சேலம் மாநகரிலுள்ள கோயில்கள் அனைத்திலும் அதிகாலையில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடக்கும். சிவன் கோயி்ல்களில் பக்தர்கள் திருவெம்பாவை பாராயணத்தையும், பெருமாள் கோயில்களில் திருப்பாவை பாராயணத்தினையும் மாதம் முழுக்க ஈடுபடுவர். அதுமட்டும் அல்லாமல் பல்வேறு பக்தி சபா சார்பில் அதிகாலை நேரத்தில் தினந்தோறும் பஜனை கோஷ்டிகள் பக்திப்பாடல்களைப் பாடிக்கொண்டு வருவர்.
thiruvembavai recitation competition,2023
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி நடந்தது.
மேலும் சேலம் மாநகரைப் பொறுத்தவரை வழக்கமாக மார்கழிப்பெருவிழாவானது ஆண்டுதோறும் அம்மாப்பேட்டையிலுள்ள செங்குந்தர் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் பல்வேறு தலைப்புகளில் தினந்தோறும் சிறப்பு சொற்பொழிவுகள் நடந்து வருகின்றன.
சேலம் மாநகரில் மேட்டுத்தெருவில் அமைந்துள்ள திருவெம்பாவை பெருவிழாக்கழகம் சார்பில் ஆண்டுதோறும் திருவெம்பாவை பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியானது சிறப்பாக நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டும் இப்போட்டிகள் சேலம் சுகவனேஸ்வர ஸ்வாமி கோயில் வளாகத்தில்நடந்தது.இப்போட்டியில்பள்ளி மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் இதில் கலந்து கொண்டனர். எல்கேஜி முதல் 2ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 1 முதல் 3 வரையிலான பாடல்களும், 3 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு 1 முதல் 5 வரையிலான பாடல்களும், 6 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 1 முதல் 10 வரையிலான பாடல்களும், 9ம் வகுப்பு மற்றும் 10 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 1 முதல் 15 வரையிலான பாடல்களும் ஒப்புவிக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
thiruvembavai recitation competition,2023
திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியில் கலந்து கொண்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள்.
thiruvembavai recitation competition,2023
மேலும் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகள் போட்டிநடைபெறும் நேரமான காலை 9 மணிக்கு முன்னதாக கோயில் வளாகத்திற்கு வந்துவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டதையடுத்து மாணவ, மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களுடன் வந்தனர்.
இதனையடுத்து 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு மாணவ, மாணவிகள் தனித்தனியே அமரவைக்கப்பட்டு போட்டியின் நடுவர்கள் முன்னிலையில் மாணவ, மாணவிகள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட திருவெம்பாவை பாடல்களை ஒப்புவித்தனர். போட்டியானது காலை 9 மணிக்கு துவங்கி மதியம் 12 .30 மணி வரை நடந்தது. பின்னர் மதியம் 1 மணிக்கு அனைத்து பிரிவுகளிலும் முதன் மூன்று மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு திருவெம்பாவை பெருவிழாக்கழக பெயரி்ட்ட ஷீல்டுடன் போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
thiruvembavai recitation competition,2023
ஒப்புவித்தல் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றவர்களுக்கு திருவெம்பாவை பெருவிழாக்கழகம் சார்பில் Nவழங்கப்பட்ட சான்றிதழ்.
போட்டிக்கான ஏற்பாடுகளை திருவெம்பாவை பெருவிழாக்கழகத்தின் செயலாளர் சந்திரசேகரன் செய்திருந்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் திருவெம்பாவை பெருவிழாக்கழக தலைவர் சிஏ . வி. பாலாஜி , செவ்வாய்ப்பேட்டை கே.சி. பி. மோகன் உட்பட உறுப்பினர்கள் , மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், மற்றும் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
thiruvembavai recitation competition,2023
6 முதல் 8ம் வகுப்பு வரையிலான ஒப்புவித்தல் போட்டியில் சேலம் ஹோலிகிராஸ் பள்ளி மாணவன் சாய்கணேஷ் முதலிடம் பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் ஷீல்டு பரிசாக வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவிற்கு பின்னர் போட்டியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு திருவெம்பாவை பெருவிழாக்கழகம் சார்பில் மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.