தமிழக மின்கட்டண உயர்வை கண்டித்து 23 ந்தேதி பாஜ சார்பில் மாநில ஆர்ப்பாட்டம் தலைவர் அண்ணாமலை பேட்டி

Tamilnadu EB Bill - தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திடீரென மத்திய அரசின் வலியுறுத்தலால் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்தார். இதற்கு மாநிலத்திலுள்ள பல்வேறு கட்சிகள் சார்பில் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். பாஜ சார்பில் 23 ந்தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தலைவர் அண்ணாமலை சேலத்தில் பேட்டியளித்தார்.;

Update: 2022-07-20 08:31 GMT

Tamilnadu EB Bill - தமிழகத்தில் மின்கட்டண உயர்வு கண்டித்து 

23 ந்தேதி மாநில அளவில் ஆர்ப்பாட்டம் 

சேலத்தில் பாஜ தலைவர் பேட்டி 


தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுவதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். இந்த திடீர் அறிவிப்பால்  பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையொட்டி பாஜ முன்னாள் மாநில தலைவர்  ஆடிட்டர் ரமேஷின் 9ம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடந்த நினேவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சேலம் வந்த மாநில தலைவர்  அண்ணாமலை  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தேர்தல் நேரத்தில் அறிவித்த  வாக்குறுதிகளை நிறைவேற்றவே இல்லை. அதே நேரத்தில் அளித்த வாக்குறுதிகளான  மின்கட்டணம் மாதந்தோறும்  அளவீடுகள் எடுத்து மின்கட்டணத்தை  கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதனை அமல்படுத்தினால் தமிழக மக்களுக்கு ஆண்டுதோறும்  வருடத்திற்கு ரூ. 6ஆயிரம் சேமிப்பாகும் என அறிவித்த திமுக தற்போது திடீரென மின்கட்டணத்தினை  உயர்த்தியுள்ளது அனைத்து தரப்பு பொதுமக்களையும் பாதிப்படைய செய்துள்ளது. 

மத்திய அரசின் மானியத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றால் தமிழகத்திலுள்ள மின்வாரிய குளறுபடிகளை சரிசெய்யவேண்டும். அப்போதுதான் மத்திய அரசு மானியத்தை அளிக்க முடியும் என ஏற்கனவே அறிவித்தது. ஆனால்  மாநில அரசு அதனை உரிய முறையில் செய்யாமல்  மத்திய அரசின் மானியத்தை ஏற்றுகொள்ளாமல்  தற்போது தனியாரிடம் அதிக விலைக்கு வாங்குவதால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. மாநிலத்திலுள்ள குளறுபடிகளை சரிசெய்துவிட்டாலே மின்மிகை மாநிலமாக தமிழகம் மாறிவிடும்.

தனியாரிடம் அதிக விலைக்கு வாங்குவதை தவிர்ப்பது, அனல் மின்நிலைய மின் உற்பத்தியை 8௦ சதவீதமாக உயர்த்துதல், ஆன்லைன் மூலம் வீடுகளுக்கு 24 மணிநேர  சோலார் வசதியை செய்து தருவது போன்ற 3 நிலைகளையும் மாநில அரசு உடனடியாக பின்பற்றினால்  மின்பற்றாக்குறை இல்லாத மாநிலமாக தமிழகத்தினை மாற்றலாம். இதற்கு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். ஆனால் இதனை செய்யாமல் மத்திய அரசின் நிர்பந்தத்தினால்தான்  மின்கட்டணம் தற்போது உயர்த்தப்படுவதாக அரசு சார்பில் அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது. எனவே மாநில அரசானது மின்கட்டண உயர்வினை திரும்ப பெறவேண்டும், இல்லாவிட்டால்   தமிழகம் முழுவதும்  அனைத்து மாவட்டங்களிலும் 23 ந்தேதியன்று  பாஜ சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் , பின்னரும்  இதற்கான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில்  அனைத்து மின்வாரிய ஆபீஸ்களின் முன்பாக பாஜ சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்  தெரிவித்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News