பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சேலம் மண்டலத்திலிருந்து சிறப்பு பேருந்துகள்!
சேலம் மண்டலத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால், கோடை விடுமுறை முடிந்து சொந்த ஊர் செல்லும் மக்கள் இந்த பேருந்துகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.;
சேலம் மண்டலத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால், கோடை விடுமுறை முடிந்து சொந்த ஊர் செல்லும் மக்கள் இந்த பேருந்துகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழகத்தில் பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு மேலும் 1 வார காலம் விடுமுறை நீட்டிக்கப்பட்டது. வரும் ஜூன் 7ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் சூழ்நிலையில், விடுமுறைக்கு உறவினர் வீடுகளுக்கு சென்றவர்கள், சுற்றுலா சென்றவர்கள் என அனைவருக்கும் உதவும் வகையில், கூடுதல் பேருந்துகளை இயக்குகிறது தமிழக போக்குவரத்து துறை.
7ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இதனால் மக்கள் பேருந்துகளைப் பிடிக்க சிரமமப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகளை விடவேண்டும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது இந்த அறிவிப்பு.
நேற்று சனிக்கிழமை முதல் சேலம் மண்டலத்தில் 200 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்றும் 200 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தேவைப்பட்டாலும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக அரசு அறிவித்துள்ளது.
சேலம் மண்டலமான சேலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, பெங்களூரு மாநகரங்களுக்கும் சிறப்பு பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவை வரும் 7ம் தேதி வரை தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.