Kottai Mariamman Temple Kumbahbisekam சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் 27ந்தேதி கும்பாபிஷேக விழா :ஏற்பாடுகள் தீவிரம்

Kottai Mariamman Temple Kumbahbisekam சேலம் கோட்டைமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவானது வரும் 27ந்தேதி நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகிறது.;

Update: 2023-10-22 08:50 GMT

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் பூச்சாட்டுதல்  (கோப்பு படம்)

Kottai Mariamman Temple Kumbahbisekam

சேலம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவானது வரும் 27 ந்தேதி நடக்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் சூடுபிடித்துள்ளது.

Kottai Mariamman Temple Kumbahbisekam


சேலம் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ளது கோட்டை மாரியம்மன் கோயில். கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக புனரமைப்பு பணிகளுக்காக இக்கோயில் இடிக்கப்பட்டு புதிய கோயில் கட்டுமான பணியானது துவங்கியது. துவங்கிய சிறிது காலத்திற்குள் தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்ததையொட்டி இரண்டு வருடங்களுக்கு மேலாக தொய்வடைந்தது. பின்னர் படிப்படியாக பணிகள் துவக்கப்பட்டு தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் இக்கோயிலானது கும்பாபிஷேக விழாவிற்கு தயாராகி வருகிறது.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் தற்காலிக கருவறையானது கோயில் முன்பாக ஏற்படுத்தப்பட்டு பக்தர்கள் வழிபட கோயில் நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் வழக்கமான வழிபாடுகளும் விழாக்களும் தொடர்ந்து நடந்து வந்தன. தற்போது ஏற்கனவே இருந்த இடத்திலேயே அம்மனுக்கு பெரிய கருவறையாக கட்டப்பட்டு அதில் அம்மன் பக்தர்களுக்கு அருள்புரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Kottai Mariamman Temple Kumbahbisekam


புதியதாக மிக உயரமாக கட்டப்பட்டுள்ள அம்மன் வீற்றிருக்கும்  கருவறை 

இதற்கு முன்பாக இருந்த கருவறையானது சிறிய அளவினதாகவே இருந்த வந்தது. இதனால் பூசாரிகள் குனிந்து குனிந்து உள்ளே சென்று சுவாமிக்கு அலங்காரம் செய்து வந்த நிலையில் தற்போது பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது பக்தர்களுக்கு நிம்மதியைத் தந்துள்ளது.

இக்கோயில் கும்பாபிஷேகத்தினையொட்டி கடந்த 18 ந்தேதியே மஹாகணபதி ஹோமத்துடன் முளைப்பாரி இடும் நிகழ்ச்சியோடு துவங்கியது. அன்று காலை புதிய கொடி மரமும் நிறுவப்பட்டது.19 ந்தேதியன்று கணபதி வழிபாடு, கிராம சாந்தி, அஷ்ட பலி பூஜைகள் நடத்தப்பட்டன.



பின்னர் வரும் 24 ந்தேதி செவ்வாய்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை கணபதி வழிபாடு, புனித தீர்த்த குட புறப்பாடு, முளைப்பாளிகை ஊர்வலமானது அருள்மிகு சுகவனேஸ்வரர் கோயிலில் இருந்து நடக்க உள்ளது. அன்று இரவு 8.30 மணிக்கு வாஸ்துசாந்தி, திசா ஹோமம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கும்.

25 ந்தேதி புதன்கிழமையன்று காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை கணபதி வழிபாடு, சங்கல்பம், புண்யாகவஜனம்,அக்னி சங்கரணம், மாலை 4மணி முதல் 5 மணி வரை சுதை விக்கிரகங்களுக்கு கண் திறப்பு நிகழ்ச்சியும்,மாலை 6மணி முதல் இரவு 10 மணி வரை முதற்கால வேள்வி வழிபாடும் நடக்க உள்ளது.

Kottai Mariamman Temple Kumbahbisekam


26ந்தேதி வியாழக்கிழமையன்று காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை இரண்டாம் கால வேள்வி வழிபாடும், காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ராஜகோபுரம் மற்றும் விமானங்களில் கலசங்கள் பொருத்துதல்நிகழ்வும், மாலை 3.15 மணி முதல் மாலை 5.30 மணி வரை மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல்நிகழ்ச்சியும் மாலை 6மணி முதல் இரவு 10 மணி வரை மூன்றாம் கால வேள்வி வழிபாடும் நடக்க உள்ளது.

27ந்தேதி வெள்ளிக்கிழமை கும்பாபிஷேக நாளான அன்று அதிகாலை 4.30மணி முதல் காலை 7.30 மணி வரை நான்காம் கால வேள்வி வழிபாடும், காலை 7.40 மணி முதல் 8 மணி வரை ராஜகோபுரம், கருவறை விமானம், பரிவார சன்னதி விமானம் மற்றும் கொடிமரத்திற்கு திருக்குட முழுக்கும், காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை மஹாகணபதி, கோட்டை பெரிய மாரியம்மன், மதுரை வீரன் சுவாமிகளுக்கு திருக்குட முழுக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது.

Kottai Mariamman Temple Kumbahbisekam



அன்றைய தினம் காலை 10 மணிக்குமேல் மூலவர் சுவாமிக்கு மஹா அபிஷேகமும், ராஜஅலங்காரம், மஹாதீபாராதனை, அன்னதான பிரசாத விநியோகமும் நடக்கிறது. அன்று மாலை தங்கரதத்தில்அம்மன் புறப்பாடும்நடக்க உள்ளதால் பக்தர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொண்டு அம்மன் அருளுக்கு பாத்திரர்களாகும்படி விழா ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

கோயில்  கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகளும், போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News