வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட திட்டப் பணிகளின் செயல்பாடுகள் மற்றும் தற்பொழுது நடைபெற்று வரும் புதிய திட்டப்பணிகள் குறித்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.;

Update: 2023-11-15 16:07 GMT

வடகிழக்கு பருவமழையையொட்டி சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் 

சேலம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட திட்டப் பணிகளின் செயல்பாடுகள் மற்றும் தற்பொழுது நடைபெற்று வரும் புதிய திட்டப்பணிகள் குறித்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி வடகிழக்கு பருவமழையையொட்டி சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளான மழைநீர் வடிகால் வசதி, சுகாதாரம், குடிநீர் விநியோகம், சாலை போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் ஆட்சியர் கார்மேகம் முன்னிலையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார்.

குறிப்பாக, 12.90 சதுர கீலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி 20,498 மக்கள் தொகை கொண்டதாகும். பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் ஆத்தூர் - நகரசிங்கபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் உள்ளூர் நீர் ஆதாரம் மூலம் 1.552 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு தற்போது நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 76 லிட்டர் தினசதி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர் வழங்கப்படுவதை அலுவலர்கள் தொடர்ந்து உறுதி செய்திட வேண்டுமென இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் சாலை வசதிகளைப் பொறுத்தவரை பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் 2022-2023 நிதியாண்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் வி.ஐ.பி நகர் பகுதியில் ரூ.2.93 கோடி மதிப்பீட்டிலும், பாலாண்டியூர் பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3.96 கோடி மதிப்பீட்டிலும், நகர்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2.98 கோடி மதிப்பீட்டிலும், முத்து ஹேவே நகர் பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் என ஆக மொத்தம் 15.402 கிலோ மீட்டர் நீளத்தில், ரூபாய் 11.34 கோடி மதிப்பீட்டில் தார்சாலைகள் மற்றும் மழைநீர்வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் தெருவிளக்கு, குப்பைகள் சேகரித்து தரம் பிரித்தல் என பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள் ளப்பட்ட துடன், பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து உடனுக்குடன் பணிகளை செய்து முடித்திட வேண்டுமென அமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்அருண் கபிலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, உதவி ஆட்சியர் (பயிற்சி) சுவாதிஸ்ரீ, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியளார் துரை, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மகா விஷ்ணு பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கணேஷ்ராம், பேரூராட்சி செயல் அலுவலர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News