தொழில்நுட்ப ஜவுளிக் கருத்தரங்கில் கலந்து கொள்ள முன்பதிவு: தொழில்முனைவோர்களுக்கு அழைப்பு

தொழில்நுட்ப ஜவுளிக் கருத்தரங்கில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தொழில்முனைவோர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.;

Update: 2023-11-06 10:45 GMT

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம்.

தொழில்நுட்ப ஜவுளிக் கருத்தரங்கில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தொழில்முனைவோர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்  கார்மேகம், தெரிவித்துள்ளதாவது :

இந்தியாவின் துணிநூல் மற்றும் ஆயத்த ஆடைகள் சந்தையில் தொழில்நுட்ப ஜவுளிகள் 13 சதவீதம் பங்களிப்பு வழங்குகின்றன. தொழில்நுட்ப ஜவுளித்துறை ஆண்டிற்கு 12 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடையும் என்றும், 2030 ஆம் ஆண்டிற்குள் சந்தை மதிப்பில் 45 பில்லியன் அமெரிக்கா டாலர் அளவிற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நமது நாட்டில் தொழில்நுட்ப ஜவுளித்துறை நேரடியாக 12 லட்சம் நபர்களுக்கும், மறைமுகமாக 50 லட்சம் நபர்களுக்கும் வேலைவாய்ப்பினை வழங்கி வருகிறது.

இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மூலமாக வருகிற 17.11.2023 அன்று கோயம்புத்தூரில் உள்ள ஹோட்டல் லீமெரிடியனில் தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை, ஒன்றிய அரசின் ஜவுளித்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு(CII) ஆகியவை இணைந்து தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கம் நடத்த உள்ளது.

மேற்படி கருத்தரங்கில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வல்லுநர்கள் தொழில்நுட்ப ஜவுளி துறையில் உள்ள வாய்ப்புகள், வளர்ச்சி, புதிய முதலீடுகள், பன்னாட்டு சந்தை மற்றும் அதனுடைய போக்குகள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு செய்வதற்கான இணையதள இணைப்பு: https://bit.ly/ClITechnicalTextiles ஆகும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி எஸ்.அம்சவேணி 9443943450, மண்டல துணை இயக்குநர், மண்டல துணை இயக்குநர் அலுவலகம், துணிநூல் துறை, 1A-2/1, சங்ககிரி மெயின் ரோடு குகை, சேலம் 636 006. அலுவலக தொலைபேசி எண். - 0427-2913006. Office Email id - ddtextilessalemregional@gmail.com.

இந்தக் கருத்தரங்கில் ஜவுளி தொழில்முனைவோர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News