சுற்றுலா தொழிலை இணையதளத்தில் பதிவது கட்டாயம்: சேலம் ஆட்சியர்

சேலம் மாவட்டத்தில் சுற்றுலா தொழில் நடத்துபவர்கள் இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.;

Update: 2023-12-05 12:57 GMT

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம்.

சேலம் மாவட்டத்தில் சுற்றுலா தொழில் நடத்துபவர்கள் இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்திட வேண்டும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் சார்பில் "சுற்றுலா வழிகாட்டிகள் (Tour Guides), சுற்றுலா பயணம் ஏற்பாட்டாளர்கள் (Tour Agents), சுற்றுலா முகவர்கள் (Travel Agents) மற்றும் சுற்றுலா போக்குவரத்து ஏற்பாட்டாளர்கள் (Tourist Transport Operators)" ஆகியவற்றை நடத்தும் நிறுவனங்கள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளின்படி சுற்றுலாத்துறை இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசாணைகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் செயல்படும் சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா பயணம் ஏற்பாடுச் செய்பவர்கள் சுற்றுலா முகவர்கள் மற்றும் சுற்றுலா போக்குவரத்து ஏற்பாட்டாளர்கள் நடத்தும் நிறுவனங்கள் சுற்றுலாத்துறை இணையதளமான https://www.tntourismtors.com -இல் உடனடியாக பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு சேலம், மாவட்ட ஆட்சியரகம், இரண்டாம் தளத்தில் செயல்பட்டுவரும் சுற்றுலா அலுவலகத்தை 89398 96397, 0427-2416449 என்ற தொலைபேசி எண்ணிலும், touristofficesIm@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News