தொப்பூர் துணை மின்நிலையப் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
தொப்பூர் துணை மின்நிலையப் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொப்பூர் துணை மின்நிலையப் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் எஸ். சங்கரசுப்பிரமணியன் (ஓமலூர்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம் மாவட்டம், தொப்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
எனவே நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில், தொப்பூர், செக்காரப்பட்டி, கம்மம்பட்டி, வெள்ளார், எருமப்பட்டி, குண்டுக்கல், ஜோடுகுளி, தளவாய்ப்பட்டி, எலத்தூர், சென்னாரெட்டியூர், கொண்ரெட்டியூர், மூக்கனூர், தீவட்டிப்பட்டி, சோழியானூர் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடுகளை செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.