வீட்டுமனை பட்டா கேட்டு ஏற்காடு தாலுகா அலுவலகத்தில் மக்கள் மனு!

எந்தவித ஆட்சேபனையும் இல்லாத அரசு நிலத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வரும் மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.;

Update: 2025-02-26 04:40 GMT

சேலம் : எந்தவித ஆட்சேபனையும் இல்லாத அரசு நிலத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வரும் மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இதைத் தொடர்ந்து ஏற்காடு ஜெரினா காடு, எம்.ஜி.ஆர். நகர், முருகன்நகர், பட்டிப்பாடி, அக்கரையூர் உள்ளிட்ட கிராமங்களில் அரசு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக 100-க்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகின்றனர்.

ஏற்காடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனுக்கொடுக்கும் போராட்டம்

இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஏற்காடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனுக்கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.ஒன்றிய செயலாளர் நேரு தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்கண்ணன் முன்னிலை வகித்தார்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், பட்டா கேட்டு மனுக்களை ஏற்காடு வட்டாட்சியர் ரமேஷ் குமாரிடம் கொடுத்தனர். முன்னதாக தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் அரசு அறிவித்ததைப் போல ஏற்காட்டில் உள்ள மக்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News