சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

Update: 2023-06-26 14:29 GMT

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் 513 மனுக்கள் வரப்பெற்றன.

மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்படும் மனுக்களின் மீது உரிய தீர்வு காணப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் வழங்கிய 35 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

முன்னதாக, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கான பசுமை முதன்மையாளர் விருது சேலம் மாவட்டத்தில் 3 நபர்களுக்கு தலா ரூ.1 இலட்சம் வீதம் காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் சேலம், பொன்னம்மாபேட்டையைச் சார்ந்த சேலம் இளைஞர் குழு சமூக நல அறக்கட்டளை, ஆத்தூர் பகுதியைச் சார்ந்த மாவட்ட வன அலுவலர் (ஓய்வு) டி.மணி அவர்கள் மற்றும் ஓமலூர் பகுதியைச் சார்ந்த பி.எம்.மணிகண்டன் அவர்களுக்கும் சேலம் மாவட்டத்தில் பசுமை முதன்மையாளர் விருதுக்கான சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கி, வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி அலர்மேல்மங்கை,  மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில் விநாயகம் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்)  அ.மயில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  இரா.மகிழ்நன் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News