ஏத்தாப்பூர் முருகன் கோவிலுக்கு போக்குவரத்து எளிதாக்க நடைபாதை பாலம் திறக்கப்பட்டது

2.02 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட நடைபாதை பாலம், முருகன் கோவிலுக்கு பாதுகாப்பு உறுதி;

Update: 2025-04-02 08:40 GMT

ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலுக்கு தேசிய நெடுஞ்சாலையில் நடைபாதை மேம்பாலம் அமைப்பு

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் 146 அடி உயரத்தில் சுவாமி சிலை உள்ளது. சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் சேலம்-உளுந்தூர்பேட்டை நான்கு வழிச்சாலையை பக்தர்கள் கடந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் இரும்பு கம்பிகளால் உயர்மட்ட நடைபாதை பாலம் அமைக்கும் பணி இரண்டு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. சாலையின் இருபுறமும் கான்கிரீட் பில்லர்கள் அமைக்கும் பணி முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்டது. நேற்று, இரும்பு கம்பிகளால் ஆன நடைபாதை பாலத்தை அந்த கான்கிரீட் இரும்பு பில்லர்கள் மீது பொருத்தும் பணி நடைபெற்றது. இதனால் அந்த பாதையில் போக்குவரத்து தற்காலிகமாக மாற்றி விடப்பட்டது. இந்த மேம்பாலம் குறித்து சேலம்-உளுந்தூர்பேட்டை நான்கு வழிச்சாலை திட்ட இயக்குனர் வரதராஜ் கூறுகையில், "முத்துமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பாதுகாப்பாகச் செல்லும் வகையில், சேலம்-உளுந்தூர்பேட்டை நான்கு வழிச்சாலையில் 2.02 கோடி ரூபாய் செலவில் நடைபாதை உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு இருபுறமும் சர்வீஸ் சாலையும் உள்ளது" என்று தெரிவித்தார். இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டதால் பக்தர்கள் பாதுகாப்பாக கோவிலுக்குச் செல்ல முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News